வெவ்வேறு முதலீட்டாளர் இலக்குகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, மியூச்சுவல் ஃபண்ட் (MF) பல வகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. MF திட்டங்களின் வகைப்பாடு பின்வருவனவற்றின் அடிப்படையில் MF திட்டங்களை பரவலாக வகைப்படுத்தலாம்: நிறுவன அமைப்பு: திறந்த நிலை, மூடிய நிலை, மத்திய நிலை முதலீட்டுத் தொகுப்பு மேலாண்மை: ஆக்டிவ் அல்லது பேசிவ் முதலீட்டு நோக்கம்: வளர்ச்சி, வருமானம், பணப்புழக்கம் அடிப்படை போர்ட்ஃபோலியோ: பங்குகள், கடன், கலப்பு, பணச் சந்தை ஆவணங்கள், பல்வகைச் சொத்து கருப்பொருள் / தீர்வு சார்ந்தவை: வரி சேமிப்பு, ஓய்வூதியப் பயன், குழந்தைகள் நலம், ஆர்பிட்ரேஜ் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் வெளிநாட்டு நிதிகள் நிதியங்களின் நிதியம் (ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகள்) நிறுவன அமைப்பின் அடிப்படையில் திட்ட வகைப்பாடு திறந்த நிலை (Open-ended) திட்டங்கள்: இவை நிரந்தரமானவை. மேலும், தற்போதைய NAV இல் அனைத்து வணிக நாட்களிலும், தொடர்ச்சியான அடிப்படையில் சந்தா மற்றும் மறு கொள்முதல் செய்வதற்குத் திறந்திருக்கும். மூடிய நிலை (Closed-ended) திட்டங்கள்: இவை நிலையான முதிர்வுத் தேதியைக் கொண்டுள்ளன. ஆரம்ப சலுகையின் போது வழங்கப்படுகின்ற யூனிட்கள், திட்ட முதிர்ச்சியின் போது மட்டுமே மீட்டெடுக்கப்படும். முதிர்ச்சிக்கு முன் வெளியேறும் வழியை வழங்குவதற்காக மூடிய நிலை திட்டங்களின் யூனிட்கள் கட்டாயமாகப் பட்டியலிடப்படுகின்றன. மேலும், அவை பங்குச் சந்தைகளில் விற்கப்படலாம் / வர்த்தகம் செய்யப்படலாம். மத்திய நிலை (Interval) திட்டங்கள்: குறிப்பிட்ட பரிவர்த்தனை காலங்களில் (இடைவெளிகள்) வாங்குவதற்கும் மீட்பதற்கும் இவை அனுமதிக்கின்றன. பரிவர்த்தனை காலம் குறைந்தபட்சம் 2 நாட்கள் இருக்க வேண்டும். மேலும், இரண்டு பரிவர்த்தனை காலங்களுக்கு இடையே குறைந்தது 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். மத்திய நிலை திட்டங்களின் யூனிட்களும் பங்குச் சந்தைகளில் கட்டாயமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. போர்ட்ஃபோலியோ மேலாண்மையின் அடிப்படையில் திட்ட வகைப்பாடு ஆக்டிவ் (Active) ஃபண்டுகள் ஒரு ஆக்டிவ் ஃபண்டில், அடிப்படைப் பத்திரங்களை வாங்குவதா/வைத்திருப்பதா/விற்பதா என்பதைத் தீர்மானிப்பதிலும், பங்குத் தேர்விலும் நிதி மேலாளர் "செயல்பாட்டுடன்" பங்களிப்பார். ஆக்டிவ் ஃபண்டுகள் போர்ட்ஃபோலியோவை உருவாக்கவும் நிர்வகிக்கவும் பல்வேறு உத்திகளையும் பாணிகளையும் பின்பற்றுகின்றன. திட்டத் தகவல் ஆவணத்தில் முதலீட்டு உத்தி மற்றும் பாணி முன்பே விவரிக்கப்பட்டுள்ளன. ஆக்டிவ் ஃபண்டுகள் பெஞ்ச்மார்க் குறியீட்டை விட சிறந்த வருமானத்தை (ஆல்ஃபா) உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியின் அபாயம் மற்றும் வருமானம், பின்பற்றப்படும் உத்தியைப் பொறுத்தது. போர்ட்ஃபோலியோவிற்கான பங்குகளைத் "தேர்ந்தெடுக்க", ஆக்டிவ் ஃபண்டுகள் உத்திகளைச் செயல்படுத்துகின்றன. பேசிவ் (Passive) ஃபண்டுகள் பேசிவ் ஃபண்டுகள் குறிப்பிட்ட குறியீடு அல்லது பெஞ்ச்மார்க்கைப் பிரதிபலிக்கும் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக. இன்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETFகள்). ஒரு பேசிவ் ஃபண்டில், பங்குத் தேர்வு / வாங்குதல்/ வைத்திருத்தல்/ விற்றல் போன்ற முடிவுகள் பெஞ்ச்மார்க் குறியீட்டால் இயக்கப்படுவதால், நிதி மேலாளர் ஒரு ஊக்கமற்ற (passive) பங்கைக் கொண்டுள்ளார். நிதி மேலாளர் / டீலர் குறைந்தபட்ச டிராக்கிங் பிழையுடன் குறியீட்டைப் பிரதிபலித்தால் மட்டுமே போதுமானது. ஆக்டிவ் மற்றும் பேசிவ் ஃபண்டுகள் ஆக்டிவ் ஃபண்டுகள் பேசிவ் ஃபண்டுகள் முதலீடுகளை நிர்வகிக்கும் தொழில்முறை நிதி மேலாளர்களை நம்பியிருக்கும் பெஞ்ச்மார்க் குறியீட்டை விடச் சிறப்பாகச் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் நிதி மேலாளர்களின் ஆல்ஃபா உருவாக்கும் திறனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது முதலீட்டு ஹோல்டிங்குகள் பெஞ்ச்மார்க் குறியீட்டைப் பிரதிபலிக்கும், நெருக்கமாகப் பின்பற்றும், எ.கா., இன்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETFகள்) சந்தைக் குறியீட்டின்படி சரியாக ஒதுக்கீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது குறைந்த செலவு விகிதம், எனவே முதலீட்டாளர்களுக்குக் குறைந்த செலவுகள் மற்றும் சிறந்த பணப்புழக்கம் முதலீட்டு நோக்கங்களின் அடிப்படையில் வகைப்பாடு MF முதலீட்டாளர்களின் பல்வேறு முதலீட்டு நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் தொகுப்புகளை வழங்குகின்றன, அவை: குரோத் ஃபண்டுகள் - மூலதன மதிப்பு வளர்ச்சி மூலதனப் பாதுகாப்பு வழக்கமான வருமானம் பணப்புழக்கம் வரி சேமிப்பு முதலீட்டாளரின் தேவைகளுக்கு ஏற்ப முதலீட்டை மாற்றியமைக்க உதவும் வகையில், வளர்ச்சி மற்றும் ஈவுத்தொகை விருப்பங்கள் போன்ற முதலீட்டுத் திட்டங்களையும் MF-ள் வழங்குகின்றன. குரோத் ஃபண்டுகள் குரோத் ஃபண்டுகள் என்பவை மூலதன மதிப்பு உயர்வை வழங்க வடிவமைக்கப்பட்ட திட்டங்களாகும். இவை முதன்மையாக ஈக்விட்டி போன்ற வளர்ச்சி சார்ந்த சொத்துகளில் முதலீடு செய்கின்றன. வளர்ச்சி சார்ந்த நிதிகளில் முதலீடு செய்வதற்கு நடுத்தர முதல் நீண்ட கால முதலீட்டு வரம்பு தேவைப்படுகிறது. வரலாற்று ரீதியாக, நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, ஈக்விட்டி ஒரு சொத்து வகுப்பாகப் பிற வகையான முதலீடுகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இருப்பினும், அடிப்படை ஈக்விட்டி பங்குகளின் விலைகள் மாறக்கூடும் என்பதால், குறுகிய காலத்தில் குரோத் ஃபண்டுகளின் வருமானம் நிலையற்றதாக இருக்கும். எனவே, முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் வருமானத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்டிருக்க வேண்டும். வருமான நிதிகள் (Income Funds) முதலீட்டாளர்களுக்கு வழக்கமான மற்றும் நிலையான வருமானத்தை வழங்குவதே வருமான நிதிகளின் நோக்கமாகும். வருமான நிதிகள், கார்ப்பரேட் பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் அரசுப் பத்திரங்கள் போன்ற நிலையான வருமானப் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. நிதியின் வருமானம், முதலீடுகளில் ஈட்டப்படும் வட்டி வருமானம், மற்றும் பத்திரங்களின் மதிப்பில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கிறது. போர்ட்ஃபோலியோ தேவையான வருமானத்தை உருவாக்கினால், வருமானத்தை விநியோகிக்கப்படும். வருமானத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வைக்கப்பட்டிருக்கும் பத்திரங்களின் காலம் மற்றும் கடன் தரத்தைப் பொறுத்து வருமானம் அமையும். லிக்விட் / ஓவர்நைட் / பணச் சந்தை MF பணப்புழக்கம், அசல் பாதுகாப்போடுக் கூடிய அதற்கேற்ற வருமானத்தையும் விரும்பும் முதலீட்டாளர்களுக்கான, லிக்விட் திட்டங்கள், ஓவர்நைட் ஃபண்டுகள் மற்றும் பணச் சந்தை MF-கள் ஏற்றவை. இவை, 91 நாட்களுக்கு மிகாத முதிர்வு காலங்களைக் கொண்ட பணச் சந்தை ஆவணங்களில்* முதலீடு செய்கின்றன. சந்தையில் நிலவும் குறுகிய கால வட்டி விகிதத்தைப் பொறுத்து, நிதிகளின் வருமானம் அமையும். குறுகிய காலத்திற்குத் தங்களின் உபரி நிதியை வைத்திருக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இவை சிறந்தவை. நீண்ட காலத்திற்கு இந்த நிதிகளைப் பயன்படுத்தும் முதலீட்டாளர்கள், நீண்ட காலத்திற்கு ஏற்ற தொகுப்புகளிலிருந்து கிடைக்கக்கூடிய சிறந்த வருமானத்தை இழக்க நேரிடலாம். * பணச் சந்தை ஆவணங்களில், வணிகப் பத்திரங்கள், வணிக பில்ஸ், கருவூல பில்ஸ், ஒரு வருடம் வரை காலாவதியாகாத முதிர்வு காலத்தைக் கொண்ட அரசுப் பத்திரங்கள், கால் அல்லது நோட்டீஸ் நிதி, வைப்புச் சான்றிதழ்கள், யூசன்ஸ் பில்ஸ் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது குறிப்பிடும் பிற ஒத்த ஆவணங்கள் ஆகியவை அடங்கும். முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவின் அடிப்படையில் வகைப்பாடு MF தொகுப்புகளை அவற்றின் அடிப்படை போர்ட்ஃபோலியோ கலவையின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்: வகைப்பாட்டின் முதல் நிலை - ஈக்விட்டி, கடன், பணச் சந்தை ஆவணங்கள் அல்லது தங்கம் போன்ற நிதி முதலீடு செய்யும் சொத்து வகுப்பின் அடிப்படையில் அமைந்திருக்கும். வகைப்பாட்டின் இரண்டாவது நிலை போர்ட்ஃபோலியோவை உருவாக்கப் பயன்படுத்தப்படும் உத்திகள் மற்றும் பாணிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது, அதாவது வருமான நிதியம், டைனமிக் பாண்ட் ஃபண்ட், உள்கட்டமைப்பு நிதியம், லார்ஜ்-கேப் / மிட்-கேப் / ஸ்மால்-கேப் ஈக்விட்டி ஃபண்ட், வேல்யூ ஃபண்ட் போன்றவை. போர்ட்ஃபோலியோ கலவை- திட்டத்தின் முதலீட்டு நோக்கங்களின் அடிப்படையில் காணப்படுகிறது. SEBI-ஆல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வகைப்பாடு அக்டோபர் 2017 இல் வெளியிடப்பட்ட திட்டங்களின் வகைப்பாடு குறித்த SEBI வழிகாட்டுதல்களின்படி, MF திட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன: ஈக்விட்டி திட்டங்கள் கடன் திட்டங்கள் ஹைபிரிட் திட்டங்கள் ஓய்வு மற்றும் குழந்தைகளுக்கான தீர்வு நோக்குடைய திட்டங்கள் பிற திட்டங்கள் - இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் ETF-கள், மற்றும் ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகள் வகைப்பாட்டின் பிற முக்கிய புள்ளிகள்: ஈக்விட்டி வகையின் கீழ் - லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் இப்போது வரையறுக்கப்பட்டுள்ளன. திட்டங்களின் பெயரிடும் மரபு, குறிப்பாக கடன் திட்டங்கள், அடிப்படை போர்ட்ஃபோலியோவின் அபாய அளவைப் பொறுத்தது. உதாரணமாக, முந்தைய "Credit Opportunity Fund" இப்போது "Credit Risk Fund" என்று அழைக்கப்படுகிறது. பேலன்ஸ்டு / ஹைபிரிட் ஃபண்டுகள் மேலும் கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட், பேலன்ஸ்டு ஹைபிரிட் ஃபண்ட் மற்றும் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் என வகைப்படுத்தப்படுகின்றன. ஈக்விட்டி திட்டங்கள் ஈக்விட்டி திட்டம் எனப்படும் ஒரு நிதி: முதன்மையாக ஈக்விட்டிகள் மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஆவணங்களில் முதலீடு செய்கிறது நீண்ட கால வளர்ச்சியை நாடும். ஆனால், குறுகிய காலத்தில், ஏற்ற-இறக்கத்துடன் காணப்படலாம் அதிக அபாய ஏற்பு மற்றும் நீண்ட முதலீட்டு எல்லை கொண்ட முதலீட்டாளர்களுக்கு ஏற்றது பொதுவாக, ஈக்விட்டி ஃபண்டின் நோக்கம், நீண்ட கால மூலதன மதிப்பீட்டைப் பெறுவதாகும். சந்தையின் சில துறைகளில் கவனம் செலுத்துவது, அல்லது வேல்யூ / குரோத் பங்குகளில் முதலீடு செய்வது போன்ற குறிப்பிட்ட முதலீட்டு பாணியைக் ஈக்விட்டி ஃபண்டுகள் கையாளலாம். SEBI வழிகாட்டுதல்களின்படி ஈக்விட்டி ஃபண்ட் பிரிவுகள் திட்ட வகை முதலீட்டுத் தேவை மல்டி கேப் ஃபண்ட்* ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஆவணங்களில் குறைந்தது 75% முதலீடு ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஆவணங்களில் குறைந்தது 65% முதலீடு லார்ஜ் கேப் ஃபண்ட் லார்ஜ் கேப் பங்குகளில் குறைந்தது 80% முதலீடு லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட் லார்ஜ் கேப் பங்குகளில் குறைந்தது 35% மற்றும் மிட் கேப் பங்குகளில் 35% முதலீடு மிட் கேப் ஃபண்ட் மிட் கேப் பங்குகளில் குறைந்தது 65% முதலீடு ஸ்மால் கேப் ஃபண்ட் ஸ்மால் கேப் பங்குகளில் குறைந்தது 65% முதலீடு டிவிடெண்ட் யீல்டு ஃபண்ட் ஈவுத்தொகை வழங்கும் பங்குகளில் பிரதானமாக முதலீடு செய்கிறது, பங்குகளில் குறைந்தது 65% முதலீடு வேல்யூ ஃபண்ட் வேல்யூ முதலீட்டு உத்தி, பங்குகளில் குறைந்தது 65% முதலீடு கான்ட்ரா ஃபண்ட் பங்குகளில் குறைந்தது 65% முதலீட்டுடன், திட்டம் ஒரு கான்ட்ரேரியன் முதலீட்டு உத்தியைப் பின்பற்றுகிறது ஃபோகஸ்டு ஃபண்ட் பங்குகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துகிறது (அதிகபட்சம் 30), ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஆவணங்களில் குறைந்தது 65% முதலீடு செக்டோரல் / தீமேட்டிக் ஃபண்ட் குறிப்பிட்ட துறை / கருப்பொருளின் பங்குகளில் குறைந்தது 80% முதலீடு ELSS நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம், 2005-இன் படி, பங்குகளில் குறைந்தது 80% முதலீடு * சந்தையின் பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளின் பங்குகளில் முதலீடு செய்வதால், இவை டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பன்முகப்படுத்தல் ஒரு சில பங்குகள், துறைகள் அல்லது பிரிவுகளில் அதிக வெளிக்காட்டுதலின் அபாயத்தைக் குறைக்கிறது. செக்டர் ஸ்பெசிஃபிக் ஃபண்டுகள் உள்கட்டமைப்பு, வங்கி, தொழில்நுட்பம் அல்லது மருந்துகள் போன்ற பொருளாதாரத்தின் ஒரு குறிப்பிட்ட துறையில் செக்டோரல் ஃபண்டுகள் முதலீடு செய்கின்றன. இந்த ஃபண்டுகள் பொருளாதாரத்தின் ஒரு துறையில் மட்டுமே கவனம் செலுத்துவதால், அவை பன்முகப்படுத்தலைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால் அதிக அபாயம் கொண்டவை. அத்தகைய ஃபண்டுகளில் முதலீடு செய்யும் காலக்கட்டம் முக்கியமானது. ஏனெனில், துறைகளின் செயல்திறன் சுழற்சி முறையில் இருக்கக்கூடும். துறை சார்ந்த ஃபண்டுகளின் எடுத்துக்காட்டுகள் கீழ்காணும் துறைகளில் முதலீடு செய்யும் நோக்கத்தைக் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்: பார்மா மற்றும் ஹெல்த்கேர் துறை வங்கி மற்றும் நிதித் துறை FMCG (வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள்) மற்றும் தொடர்புடைய துறைகள் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய துறைகள் தீமேட்டிக் ஃபண்டுகள் உள்கட்டமைப்பு, சேவைத் தொழில்கள், PSU-கள் அல்லது MNC-கள் போன்ற ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைச் சேர்ந்த தொழில்களில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை தீமேட்டிக் ஃபண்டுகள் தேர்ந்தெடுக்கின்றன. அவை செக்டோரல் ஃபண்டுகளை விட அதிக பன்முகப்படுத்தப்பட்டவை. எனவே, செக்டோரல் ஃபண்டுகளை விட குறைவான அபாயத்தைக் கொண்டுள்ளன. வேல்யூ ஃபண்டுகள் (உத்தி மற்றும் பாணி அடிப்படையிலான ஃபண்டுகள்) பங்குத் தேர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு அளவுருக்களின் அடிப்படையில் ஈக்விட்டி ஃபண்டுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படலாம்: வளர்ச்சி நிதிகள், சந்தையை விட சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படும் மொமெண்டம் பங்குகளை அடையாளம் காண்கின்றன. மதிப்பு நிதிகள், தற்போது குறைவான மதிப்பீட்டைக் கொண்டுள்ள, ஆனால் அவற்றின் மதிப்பு வெளிப்படும்போது, காலப்போக்கில் சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படும் பங்குகளை அடையாளம் காண்கின்றன. பங்குத் தேர்விலிருந்து பயனடைய, ஈக்விட்டி ஃபண்டுகள் செறிவூட்டப்பட்ட போர்ட்ஃபோலியோவைக் கொண்டிருக்கலாம். தவறான தேர்வின் விளைவு, போர்ட்ஃபோலியோவின் வருமானத்தில் கணிசமானதாக இருக்கும் என்பதால், இந்த ஃபண்டுகள் அதிக அபாயத்தைக் கொண்டிருக்கும். கான்ட்ரா ஃபண்டுகள் கான்ட்ரா ஃபண்டுகள் என்பவை சந்தையில் முரண்பாடான பார்வையைக் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும். குறைவான செயல்திறன் கொண்ட பங்குகள்/துறைகள், நீண்ட காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் என்ற நோக்கில், குறைந்த விலை புள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. கான்ட்ரா ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோக்களில், மந்தச் சந்தை நிலைகளின் போது, எதிர்மறையான வருமானத்தை அளித்த தற்காப்பு மற்றும் சரிந்த பங்குகள் உள்ளன. ஒவ்வொரு சந்தைச் சுழற்சியிலும், முன்கூட்டியே போக்கைப் கண்டறிவது சாத்தியமில்லை என்பதால், இந்த ஃபண்டுகள் தவறான முடிவுகளை எடுக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன. மேலும், இந்த ஃபண்டுகள் பொதுவாக விறுவிறுப்பான சந்தையில் குறைவான செயல்திறனைக் காட்டுகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகளின் திட்ட வகைப்பாடு குறித்த SEBI வழிகாட்டுதல்களின்படி, ஒரு ஃபண்ட் ஹவுஸ், கான்ட்ரா ஃபண்ட் அல்லது வேல்யூ ஃபண்டை ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே வழங்க முடியும். இரண்டையும் அல்ல. ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம், 2005-இன் படி, ELSS, பங்குகளில் குறைந்தது 80% முதலீடு செய்கிறது. இது 3 வருட லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. இது வரி சேமிப்பு விருப்பங்கள் அனைத்திலும் மிகக் குறுகியதாகும். வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ₹1,50,000 வரை விலக்கு பெற, தற்போது தகுதி பெற்றுள்ளது. கடன் திட்டங்கள் கடன் நிதி (இன்கம் ஃபண்ட் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது முதன்மையாகப் பத்திரங்கள் அல்லது பிற கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஒரு நிதி ஆகும். அரசாங்கம், பொது நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய மற்றும் நீண்ட காலப் பத்திரங்களில் கடன் நிதிகள் முதலீடு செய்கின்றன. கருவூல பில்கள், அரசுப் பத்திரங்கள், டிபென்சர்கள், கமர்ஷியல் பேப்பர்கள், சர்டிபிகேட்ஸ் ஆஃப் டெபாசிட் மற்றும் பிற போன்றவை கடன் நிதிகள் போர்ட்ஃபோலியோவில் உள்ள பத்திரங்களின் காலம் மற்றும் / அல்லது பத்திரங்களை வழங்குபவர்கள் அல்லது அவர்களின் நிதி மேலாண்மை உத்திகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படலாம். அதாவது: குறுகிய கால ஃபண்டுகள், நடுத்தர கால ஃபண்டுகள், நீண்ட கால ஃபண்டுகள் கில்ட் ஃபண்ட், ட்ரெஷரி ஃபண்ட், கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெப்ட் ஃபண்ட் மிதவை விகித நிதிகள், டைனமிக் பாண்ட் நிதிகள், நிலையான முதிர்வு திட்டங்கள் கடன் நிதிகளில் , வருமானம் உருவாக்குதல் மற்றும் மூலதனத்தைப் பாதுகாப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. SEBI வழிகாட்டுதல்களின்படி கடன் நிதி வகைகள் திட்ட வகை முதலீட்டுத் தேவை ஓவர்நைட் ஃபண்ட் 1 நாள் முதிர்வு கொண்ட ஓவர்நைட் பத்திரங்கள் லிக்விட் ஃபண்ட் 91 நாட்கள் வரை மட்டுமே முதிர்வு கொண்ட கடன் மற்றும் பணச் சந்தை பத்திரங்கள் அல்ட்ரா ஷார்ட் டுரேஷன் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் மெக்காலே காலம் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை கொண்ட கடன் மற்றும் பணச் சந்தை ஆவணங்கள் லோ டுரேஷன் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் மெக்காலே காலம் 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை கொண்ட கடன் மற்றும் பணச் சந்தை ஆவணங்களில் முதலீடு பணச் சந்தை நிதி 1 வருடம் வரை முதிர்வு கொண்ட பணச் சந்தை ஆவணங்களில் முதலீடு ஷார்ட் டுரேஷன் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் மெக்காலே காலம் 1 வருடம் முதல் 3 வருடங்கள் வரை கொண்ட கடன் மற்றும் பணச் சந்தை ஆவணங்களில் முதலீடு மீடியம் டுரேஷன் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் மெக்காலே காலம் 3 வருடங்கள் முதல் 4 வருடங்கள் வரை கொண்ட கடன் மற்றும் பணச் சந்தை ஆவணங்களில் முதலீடு மீடியம் டு லாங் டுரேஷன் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் மெக்காலே காலம் 4 மற்றும் 7 வருடங்களுக்கு இடையில் உள்ள கடன் மற்றும் பணச் சந்தை ஆவணங்களில் முதலீடு லாங் டுரேஷன் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் மெக்காலே காலம் 7 வருடங்களுக்கும் அதிகமாக உள்ள கடன் மற்றும் பணச் சந்தை ஆவணங்களில் முதலீடு டைனமிக் பாண்ட் முழு காலத்திலும் முதலீடு கார்பரேட் பாண்ட் ஃபண்ட் கார்பரேட் பத்திரங்களில் குறைந்தபட்சம் 80% முதலீடு, AA+ மற்றும் அதற்கு மேல் தரமதிப்பீடு பெற்ற கார்பரேட் பத்திரங்களில் மட்டுமே கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் கார்பரேட் பத்திரங்களில் குறைந்தபட்சம் 65% முதலீடு, AA மற்றும் அதற்குக் கீழ் தரமதிப்பீடு பெற்ற கார்பரேட் பத்திரங்களில் மட்டுமே பேங்கிங் மற்றும் PSU ஃபண்ட் வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள், பொது நிதி நிறுவனங்கள் மற்றும் முனிசிபல் பத்திரங்களின் கடன் ஆவணங்களில் குறைந்தபட்சம் 80% கில்ட் ஃபண்ட் குறைந்தபட்சம் 80% G-secs-ல், முழு முதிர்வுக் காலத்திலும் 10 வருட நிலையான கால அளவைக் கொண்ட கில்ட் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் மெக்காலே காலம் 10 வருடங்களுக்கு சமமாக இருக்கும்படி, G-secs-ல் குறைந்தபட்சம் 80% ஃப்ளோட்டர் ஃபண்ட் குறைந்தபட்சம் 65% மிதவை விகித ஆவணங்களில் (ஸ்வாப்கள் / டெரிவேட்டிவ்களைப் பயன்படுத்தி மிதவை விகித எக்ஸ்போஷர்களாக மாற்றப்பட்ட நிலையான விகித ஆவணங்கள் உட்பட) டைனமிக் பாண்ட் ஃபண்டுகள் - வட்டி விகிதங்கள் மீதான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப போர்ட்ஃபோலியோவில் உள்ள பத்திரங்களின் காலவரையறையை மாற்றுகின்றன. வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டால், காலவரையறை அதிகரிக்கப்படும். இதற்கு நேர்மாறாகவும் செயல்படும். ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்டுகள் - குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இதனால். தற்போதைய சந்தை விகிதங்களுக்கு ஏற்ப இந்த ஃபண்டுகள் கூப்பன் வருமானத்தைப் பெறுகின்றன. இது வட்டி விகித அபாயத்தை பெருமளவில் நீக்குகிறது. குறுகிய கால கடன் நிதிகள் குறுகிய கால கடன் நிதிகளின் முதன்மை கவனம் கூப்பன் வருமானமாகும். அதிக கூப்பன் வருமானத்தைப் பெற , அவர்கள் எடுக்கும் கிரெடிட் அபாயத்திற்காகவும், குறுகிய கால கடன் நிதிகள் மதிப்பிடப்பட வேண்டும். பத்திரங்களின் கால அளவு, ஃபண்டின் வருமானம் மற்றும் அபாயத்தை வரையறுக்கிறது. குறைந்த கால அளவுகளைக் கொண்ட பத்திரங்களை வைத்திருக்கும் ஃபண்டுகள் குறைந்த அபாயம் மற்றும் குறைந்த வருமானத்தைக் கொண்டுள்ளன. லிக்விட் ஃபண்டுகள், முதிர்வடைய 91 நாட்களுக்கு மிகாமல் உள்ள பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. அல்ட்ரா ஷார்ட்-டெர்ம் டெட் ஃபண்டுகள் அதிக கூப்பன் வருமானத்தைப் பெற, சற்றே அதிக கால அளவு கொண்ட போர்ட்ஃபோலியோவை வைத்துள்ளன. குறுகிய கால ஃபண்டுகள், பிரதானமாக குறுகிய கால கடன் போர்ட்ஃபோலியோவில் இருந்து ஈட்டப்படும் கூப்பன் வருமானத்தை, விலை உயர்வில் இருந்து பலன் பெற, நீண்ட கால பத்திரங்களுடனான சிலவற்றுடன் இணைக்கின்றன. நிலையான முதிர்வு திட்டங்கள் (FMP-கள்) வட்டி விகித அபாயத்தை அகற்றி, ஃபண்டின் முதிர்வுக்குப் பொருந்தக்கூடிய முதிர்வைக் கொண்ட பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்வதன் மூலம், ஈவுத்தொகையைப் பாதுகாக்கும் மூடிய நிலை நிதி ஆகும். FMP கால அளவோடு பொருந்தக்கூடிய முதிர்வு விவரத்தைக் கொண்ட முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்குகின்றன. முதலீடுகள் லாக்-இன் செய்யப்படுவதால், லிக்விட் ஃபண்டுகள் மற்றும் அல்ட்ரா ஷார்ட்-டெர்ம் ஃபண்டுகளை விட சிறந்த வருமானத்தை வழங்கும் திறன் உள்ளது. முதிர்வு காலத்தில் முதலீடுகள் பணமாக்கப்படுவதால், குறைந்த மார்க்-டு-மார்க்கெட் அபாயத்தைக் கொண்டுள்ளன. முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பணத்தை ஒதுக்குகிறார்கள். ஃபண்டிலிருந்து யூனிட்களை முன்கூட்டியே மீட்க முடியாது. FMP-கள் மூடிய நிலை திட்டங்களாக இருப்பதால், அவை கட்டாயமாகப் பட்டியலிடப்படுகின்றன. முதலீட்டாளர்கள் NFO-க்குப் பிறகு, பங்குச்சந்தையில் மட்டுமே FMP-களின் யூனிட்களை வாங்க அல்லது விற்க முடியும். டிமெட்டீரியலைஸ்டு மோடில் உள்ள யூனிட்களை மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். எனவே, இதுபோன்ற திட்டங்களில் பணப்புழக்கத்தை விரும்பும் முதலீட்டாளர்கள் டிமேட் கணக்கை வைத்திருக்க வேண்டும். மூலதனப் பாதுகாப்பு சார்ந்த நிதிகள் மூலதனப் பாதுகாப்பு சார்ந்த நிதிகள் என்பவை கடன் ஆவணங்கள் மற்றும் ஈக்விட்டி டெரிவேட்டிவ்களின் போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் மூடிய நிலை ஹைபிரிட் ஃபண்டுகள் ஆகும். இந்த போர்ட்ஃபோலியோ மூலதனப் பாதுகாப்பை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு செய்வதற்கான திறனின் அடிப்படையில் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியால் தரமதிப்பீடு செய்யப்படுகிறது. தரமதிப்பீடு ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. போர்ட்ஃபோலியோவின் கடன் கூறு, மிக உயர்ந்த முதலீட்டுத் தர மதிப்பீடு கொண்ட ஆவணங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும். முதலீட்டாளர்கள் கொண்டு வரும் தொகையின் ஒரு பகுதி கடன் ஆவணங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் ஃபண்டில் முதலீடு செய்த மூலதனத்தின் சம மதிப்பில் முதிர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மூலதனம் பாதுகாக்கப்படுகிறது. நிதிகளின் மீதமுள்ள பகுதி, அதிக வருமானத்தை ஈட்ட, ஈக்விட்டி டெரிவேட்டிவ்களில் முதலீடு செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஹைபிரிட் ஃபண்டுகள் ஹைபிரிட் ஃபண்டுகள் ஈக்விட்டிகள் மற்றும் கடன் பத்திரங்களின் கலவையில் முதலீடு செய்கின்றன. SEBI ஹைபிரிட் ஃபண்டுகளை 7 துணை வகைகளாகப் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது: திட்ட வகை முதலீட்டுத் தேவை கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஆவணங்களில் 10% முதல் 25% வரை முதலீடு; மற்றும் கடன் ஆவணங்களில் 75% முதல் 90% வரை பேலன்ஸ்டு ஹைபிரிட் ஃபண்ட் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஆவணங்களில் 40% முதல் 60% வரை முதலீடு; மற்றும் கடன் ஆவணங்களில் 40% முதல் 60% வரை அக்ரெஸிவ் ஹைபிரிட் ஃபண்ட் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஆவணங்களில் 65% முதல் 80% வரை முதலீடு; மற்றும் கடன் ஆவணங்களில் 20% முதல் 35% வரை டைனமிக் அசெட் அலோகேஷன் அல்லது பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்ட் மாறும் வகையில் நிர்வகிக்கப்படும் ஈக்விட்டி / கடனில் முதலீடு (ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஆவணங்களில் 0% முதல் 100% வரை; மற்றும் கடன் ஆவணங்களில் 0% முதல் 100% வரை) மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்ட் குறைந்தது 3 அசெட் கிளாஸ்களில், ஒவ்வொரு அசெட் கிளாஸிலும் குறைந்தபட்சம் 10% ஒதுக்கீட்டுடன் முதலீடு ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஆவணங்களில் குறைந்தபட்சம் 65% முதலீட்டுடன், ஆர்பிட்ரேஜ் உத்தியைப் பின்பற்றும் திட்டம் ஈக்விட்டி சேவிங்ஸ் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஆவணங்கள் (குறைந்தபட்சம் 65%); கடன் ஆவணங்கள் (குறைந்தபட்சம் 10%) மற்றும் டெரிவேட்டிவ்கள் (ஹெட்ஜிங்கிற்கான குறைந்தபட்சம் SID-யில் குறிப்பிடப்பட வேண்டும்) ஹைபிரிட் ஃபண்டுகள் ஈக்விட்டி மற்றும் கடன் இரண்டிலும் முதலீடு செய்வதன் மூலம், வளர்ச்சிக்கும் வருமானத்திற்கும் இடையில் ஒரு "சமநிலையை" கண்டறிய முயல்கின்றன. கடன் ஆவணங்களில் இருந்து ஈட்டப்படும் வழக்கமான வருமானம், அத்தகைய ஃபண்டுகளின் வருமானத்திற்கு அதிக நிலைத்தன்மையை வழங்குகிறது. போர்ட்ஃபோலியோவில் இருக்க வேண்டிய ஈக்விட்டி மற்றும் கடனின் விகிதம், திட்டத் தகவல் ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ஈக்விட்டி சார்ந்த ஹைப்ரிட் ஃபண்டுகள் (அக்ரஸிவ் ஹைப்ரிட் ஃபண்டுகள்), முதலீட்டில் நிலையான வளர்ச்சியுடன் முதலீட்டை தேடும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றவை. கடன் சார்ந்த ஹைப்ரிட் ஃபண்டுகள் (கன்சர்வேடிவ் ஹைப்ரிட் ஃபண்டுகள்), ஈக்விட்டி முதலீட்டில் குறைந்த அபாயத்துடன் அதிக வருமானத்தை எதிர்பார்க்கும் கன்சர்வேடிவ் முதலீட்டாளர்களுக்கு ஏற்றவை. ஃபண்டின் ஆபத்து மற்றும் வருமானம், போர்ட்ஃபோலியோ எடுக்கும் ஈக்விட்டி முதலீட்டைப் பொறுத்தது. ஈக்விட்டி ஒதுக்கீடு எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அந்த அளவுக்கு ஆபத்து அதிகம். மல்டி அஸெட் ஃபண்டுகள் ஒரு மல்டி-அஸெட் ஃபண்ட், பல சொத்து வகுப்புகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது பெரும்பாலும் நிறுவன முதலீட்டுடன் தொடர்புடைய பன்முகத்தன்மையை வழங்குகிறது. மல்டி-அஸெட் ஃபண்டுகள் பல பாரம்பரிய ஈக்விட்டி மற்றும் நிலையான வருமான உத்திகள், இண்டெக்ஸ்-ட்ராக்கிங் ஃபண்டுகள், ஃபைனான்ஷியல் டெரிவேட்டிவ்கள் மற்றும் தங்கம் போன்ற கமாடிட்டிகளில் முதலீடு செய்யலாம். இந்தப் பன்முகத்தன்மை போர்ட்ஃபோலியோ, மேலாளர்களுக்கு, அபாயத்தை வெகுமதியுடன் சமநிலைப்படுத்தவும் முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக, நிலையற்ற சந்தைகளில், நிலையான நீண்ட கால வருமானத்தை வழங்கவும் அனுமதிக்கிறது. ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் இரண்டு சந்தைகளில் உள்ள விலை வித்தியாசத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஒரே நேரத்தில் ஒரு சொத்தை வாங்குவதும், விற்பதும் "ஆர்பிட்ரேஜ்" ஆகும். மேலும், வெவ்வேறு சந்தைகளில் அல்லது வெவ்வேறு வடிவங்களில் உள்ள சொத்தின் விலை வித்தியாசத்திலிருந்து லாபம் ஈட்டுவதாகும். இரண்டு சந்தைகளிலும் உள்ள செக்யூரிட்டியின் விலை வித்தியாசத்திலிருந்து வருமானத்தை ஈட்ட, ஒரு ஆர்பிட்ரேஜ் ஃபண்ட், காஷ் மார்க்கெட்டில் ஒரு பங்கினை வாங்கி, அதே நேரத்தில் அதை ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கிறது. ஃபண்ட் இரு சந்தைகளிலும் சமமான ஆனால் எதிர் நிலைகளை எடுக்கிறது. இதன் மூலம் வித்தியாசத்தை உறுதி செய்கிறது. டெரிவேட்டிவ் சுழற்சி முடிவடையும் வரை, பொசிஷன்கள் வைத்திருக்கப்பட வேண்டும். மேலும், வித்தியாசத்தைப் பெற, இரண்டு பொசிஷன்களும் ஒரே விலையில் மூடப்பட வேண்டும். காண்டிராக்ட் காலத்தின் முடிவில், காஷ் மார்க்கெட் விலை, ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட் விலையுடன் ஒன்றிணைகிறது. இதனால், இது முதலீட்டாளர் / வர்த்தகருக்கு ஆபத்தில்லாத லாபத்தை வழங்குகிறது. விலை ஏற்ற இறக்கங்கள் ஆரம்ப விலை வித்தியாசத்தை பாதிக்காது. ஏனெனில், ஒரு சந்தையில் ஏற்படும் லாபம், மற்றொரு சந்தையில் ஏற்படும் இழப்பால் ஈடுசெய்யப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கள் சொந்த நிதியை முதலீடு செய்வதால், அந்த வித்தியாசமே முழுமையான வருமானமாகும். எனவே, அதிக ஆபத்து இல்லாமல், நிலையற்ற சந்தையிலிருந்து பயனடைய விரும்பும் எச்சரிக்கையான முதலீட்டாளர்களுக்கு, ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் ஒரு நல்ல தேர்வாகக் கருதப்படுகின்றன. சொல்யூஷன்-ஓரியண்டட் மற்றும் பிற ஃபண்டுகள் திட்ட வகை முதலீட்டுத் தேவை ரிட்டயர்மென்ட் ஃபண்ட் குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது ஓய்வு பெறும் வயது வரை லாக்-இன், இதில் எது முந்தையதோ அது சில்ட்ரன்ஸ் ஃபண்ட் குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது குழந்தை மேஜர் வயதை அடையும் வரை லாக்-இன், இதில் எது முந்தையதோ அது இண்டெக்ஸ் ஃபண்டுகள் / ETFகள் ஒரு குறிப்பிட்ட இண்டெக்ஸின் செக்யூரிட்டிகளில் குறைந்தபட்சம் 95% முதலீடு ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகள் (வெளிநாடு / உள்நாடு) அடிப்படையான ஃபண்ட்(களில்) குறைந்தபட்சம் 95% முதலீடு இண்டெக்ஸ் ஃபண்டுகள் இண்டெக்ஸ் ஃபண்டுகள், சந்தை இண்டெக்ஸைப் பிரதிபலிக்கும் ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்குகின்றன. போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்பட்டுள்ள செக்யூரிட்டிகள் மற்றும் அவற்றின் வெயிட்டேஜ் ஆகியவை, இண்டெக்ஸில் உள்ளதைப் போலவே இருக்கும். சந்தை அல்லது துறை குறித்த அவர்களின் பார்வையின் அடிப்படையில், ஃபண்ட் மேலாளர், போர்ட்ஃபோலியோவை ரீபேலன்ஸ் செய்ய மாட்டார். இண்டெக்ஸ் ஃபண்டுகள் மந்த/பேசிவ் முறையில் நிர்வகிக்கப்படுகின்றன. அதாவது, ஃபண்ட் மேலாளர், ஃபண்டை அதன் இண்டெக்ஸுடன் சீராக வைத்திருக்க, சிறிய, குறிப்பிட்ட கால திருத்தங்களை மட்டுமே செய்வார். எனவே, ஒரு இண்டெக்ஸ் ஃபண்ட், அது பின்பற்றும் இண்டெக்ஸால் குறிப்பிடப்படும் அதே வருமானத்தையும் /ஆபத்தையும் வழங்குகிறது. இண்டெக்ஸ் ஃபண்ட் வசூலிக்கும் கட்டணம் 1.5% ஆக வரம்பிடப்பட்டுள்ளது. இண்டெக்ஸின் கட்டமைப்பு தெரிந்திருப்பதால், போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக இருக்கும் பங்குகளை முதலீட்டாளர்கள் அறிந்திருப்பது, அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்டுகள் (ETFகள்) இண்டெக்ஸ் ஃபண்டைப் போலவே, இண்டெக்ஸ்/கமாடிட்டி/பாண்டுகள்/ சொத்துக்களின் தொகுப்பைப் கண்காணிக்கும் ஒரு சந்தைப்படுத்தக்கூடிய செக்யூரிட்டியே, ETF ஆகும். ETFகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. வழக்கமான மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலல்லாமல், ETF ஒரு பங்குச் சந்தையில் பொதுவான பங்கைப் போல வர்த்தகம் செய்யப்படுகிறது. பங்குச் சந்தையில் வாங்கப்பட்டு விற்கப்படுவதால், வேறு பங்கைப்போல, ETF-இன் வர்த்தக விலை நாள் முழுவதும் மாறுகிறது. ETF யூனிட்டுகள் கட்டாயமாக டீமேட் முறையில் வைக்கப்படுகின்றன. ETFகள் மந்த / பேசிவ் முறையில் நிர்வகிக்கப்படுகின்றன. அதாவது, ஃபண்ட் மேலாளர், ஃபண்டை அதன் இண்டெக்ஸுடன் சீராக வைத்திருக்க சிறிய, குறிப்பிட்ட கால திருத்தங்களை மட்டுமே செய்வார். ஒரு ETF இண்டெக்ஸை மிஞ்ச முயற்சிக்காமல், அதைப் கண்காணிப்பதால் , இது ஆக்டிவ் முறையில் நிர்வகிக்கப்படும் போர்ட்ஃபோலியோக்களைக் காட்டிலும் குறைவான நிர்வாகச் செலவுகளைக் கொண்டுள்ளது. ஒரு ஃபண்ட் மேலாளரால் நிர்வகிக்கப்படும் "ஆக்டிவ்" ஃபண்டில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, ஒருவர் ETF யூனிட்டுகளை வாங்கும் போது, சந்தையின் சக்தியையே பயன்படுத்துகிறார். இண்டெக்ஸுக்கு இணையான வருமானத்தையும் பங்குகளுக்கு இணையான லிக்விடிட்டியையும் தேடும் முதலீட்டாளர்களுக்கு ETFகள் ஏற்றவை. ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகள் (FoF) ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகள் என்பவை அதே மியூச்சுவல் ஃபண்டின் அல்லது பிற மியூச்சுவல் ஃபண்டுகளின் பிற திட்டங்களின் யூனிட்டுகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாகும். முதலீட்டுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் FoF-இன் முதலீட்டு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. FoF இரண்டு கட்ட செலவுகளைக் கொண்டுள்ளது: FoF முதலீடு செய்யும் யூனிட்டுகளின் திட்டச் செலவு மற்றும் FoF-இன் சொந்தச் செலவு. இரண்டு நிலைகளிலும் வசூலிக்கப்படும் மொத்தச் செலவுகளை விதிமுறைகள் பின்வருமாறு கட்டுப்படுத்துகின்றன: லிக்விட் திட்டங்கள், இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் ETFகளில் முதலீடு செய்யும் FoF-களுக்கான TER, 1% ஆக வரம்பிடப்பட்டுள்ளது. ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் FoF-களின் TER, 2.25% ஆக வரம்பிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளவை தவிர, மற்ற திட்டங்களில் முதலீடு செய்யும் FoF-களின் TER, 2% ஆக வரம்பிடப்பட்டுள்ளது. கோல்டு எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்டுகள் (கோல்டு ETFகள்) கோல்டு ETFகள் என்பவை தங்கத்தை அடிப்படைச் சொத்தாகக் கொண்ட ETFகள் ஆகும். திட்டம் கைவசம் உள்ள தங்கத்துக்கு யூனிட்டுகளை வழங்குகிறது. ஒவ்வொரு யூனிட்டும், தங்கத்தின் ஒரு குறிப்பிட்ட எடையைக் குறிக்கிறது. இது பொதுவாக ஒரு கிராமைக் குறிக்கும். இந்தத் திட்டம் பௌதீகத் தங்கம் அல்லது SEBI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட தங்கம் சார்ந்த முதலீட்டுச் சாதனங்களின் வடிவில் தங்கத்தை வைத்திருக்கிறது. வங்கிகளின் கோல்டு டெபாசிட் திட்டங்களில் நிகர சொத்துக்களில் 20% வரை திட்டங்கள் முதலீடு செய்யலாம். உலோகச் சந்தையில் உள்ள தங்கத்தின் விலைக்கு ஏற்ப ETF யூனிட்டுகளின் விலை நகர்கிறது. NFO-க்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட தங்கம் அல்லது நிதிகளுக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் எனப்படும் இடைத்தரகர்களுக்கு யூனிட்டுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் அடிப்படைத் தங்கத்துக்காக யூனிட்டுகளை ரிடீம் செய்யலாம். கோல்டு ETF-களின் நன்மைகள் வசதி: தங்கத்தை பௌதீக வடிவில் வைத்திருப்பதற்குப் பதிலாக மின்னணு முறையில் வைத்திருக்கும் வாய்ப்பு. திருட்டு அல்லது தூய்மை குறித்த ஆபத்துகள் இல்லாததால், தங்கத்தை வைத்திருக்க, இது ஒரு பாதுகாப்பான வழி. எளிதான லிக்விடிட்டி மற்றும் பரிவர்த்தனையின் எளிமையை வழங்குகிறது. மூலதன ஆதாய வரி விதிப்பு நோக்கங்களுக்காக, கோல்டு ETFகள் "குறிப்பிடப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளாக" (அதாவது ஈக்விட்டி அல்லாதவை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) கருதப்படுகின்றன. கோல்டு ETFகளுக்கு சொத்து வரி பொருந்தாது. இன்டர்நேஷனல் ஃபண்டுகள் பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைத் தங்கள் போர்ட்ஃபோலியோவில் வைத்திருப்பதன் மூலம், இந்தியாவுக்கு வெளியேயுள்ள சந்தைகளில் முதலீடு செய்வதை இன்டர்நேஷனல் ஃபண்டுகள் சாத்தியமாக்குகின்றன: வெளிநாட்டில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஈக்விட்டி இந்திய நிறுவனங்களின் ADRகள் மற்றும் GDRகள் வெளிநாட்டில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் கடன் பிற நாடுகளின் ETFகள் பிற நாடுகளில் உள்ள பேசிவ் இண்டெக்ஸ் ஃபண்டுகளின் யூனிட்டுகள் பிற நாடுகளில் ஆக்டிவ் முறையில் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்டுகள் இன்டர்நேஷனல் ஈக்விட்டி ஃபண்டுகள் தங்கள் போர்ட்ஃபோலியோக்களில் சிலவற்றை இந்திய ஈக்விட்டி அல்லது கடனிலும் வைத்திருக்கலாம். லிக்விடிட்டியை நிர்வகிக்க அவர்கள் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியை மணி மார்க்கெட் இன்ஸ்ட்ரூமென்ட்களில் வைத்திருக்கலாம். இன்டர்நேஷனல் ஃபண்டுகள் முதலீட்டாளருக்குக் கூடுதல் நன்மைகளைத் தருகின்றன: உலகளாவிய சந்தைகள் உள்நாட்டு சந்தைகளுடன் குறைந்த தொடர்பைக் கொண்டிருக்கலாம் என்பதால் பன்முகத்தன்மை உள்நாட்டில் கிடைக்காத முதலீட்டு விருப்பங்கள் தங்கள் துறையில் உலகளாவிய தலைவர்களாக உள்ள நிறுவனங்களுக்கான அணுகல் அத்தகைய ஃபண்டுகளில் முதலீடு செய்வதுடன் தொடர்புடைய ஆபத்துகளும் உள்ளன. அவை: குறைவான அறிமுகம் மற்றும் புரிந்துகொள்வது கடினமான அரசியல் நிகழ்வுகள் மற்றும் மேக்ரோ பொருளாதரக் காரணிகள் அன்னியச் செலாவணி விகிதத்தின் ஏற்ற இறக்கங்கள், இது ரிடெம்ப்ஷன் வருமானத்தைப் பாதிக்கலாம் நாடுகள் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கான தங்கள் முதலீட்டுக் கொள்கையை மாற்றிக்கொள்ளலாம் வரி விதிப்பு நோக்கங்களுக்காக, இந்த ஃபண்டுகள் ஈக்விட்டி அல்லாதவை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாகக் கருதப்படுகின்றன.