அன் கிளைம்ட் அமௌண்ட் அல்லது அன் கிளைம்ட் அசெட்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என்பதை அண்மையில் கேள்விப்பட்டு அதன் அர்த்தம் என்ன என்று யோசித்திருக்கிறீர்களா?நல்லது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் முதலீட்டாளருக்கு செலுத்த வேண்டிய எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் தொகையும் செலுத்தப்படாமல் அல்லது விடுவிக்கப்படாமல் இருந்து முதலீட்டாளரின் வங்கி கணக்கில் காசோலை அல்லது வாரண்ட் மூலம் முதலீட்டாளரால் பணமாக்கப்படாத போதெல்லாம் அன் கிளைம்ட் அசெட்ஸ் உருவாகின்றன.ஒருவேளை இதில் சில அன் கிளைம்டு சொத்துக்கள் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம். இது நீங்கள் அல்லது உங்கள் குடும்பம் டிவிடண்ட் பிளானில் முதலீடு செய்ததாக இருக்கலாம். IDCW ( இன்கம் டிஸ்ட்ரிபயூஷன் கம் கேப்பிடல் வித்ட்ரால்) அல்லது ரிடம்ஷன் பணத்தை கோறி இருக்கலாம். அப்பொழுது டிவிடண்ட் அல்லது செக் அல்லது டிடி தபாலில் அனுப்பப்படும். ஆனால் உங்களுக்கு வரவில்லை என்றால் உங்கள் விலாசம் மாறி இருக்கலாம். அல்லது அதை நீங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய மறந்திருக்கலாம். உங்கள் புதிய மற்றும் சரியான வங்கி விவரங்கள் உங்கள் முதலீட்டில் புதுப்பிக்கப்படவில்லை. நீங்கள் கேஒசிக்கு இணங்கவில்லை. ஆனால் கவலைப்படாதீர்கள். உங்கள் பணம் இன்னமும் பத்திரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது அது அன் கிளைம்ட் என வகைப்படுத்தப்பட்டாலும் நீங்கள் இப்பொழுதும் இந்த வீடியோவில் காட்டியது போல செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் அதை கிளைம் செய்யலாம். உங்கள் அன் கிளைம்டு இன்வெஸ்ட்மென்ட்டை எவ்வாறு ட்ரேஸ் செய்வது ரெஜிஸ்ட்ரார் மற்றும் டிரான்ஸ்பர் ஏஜென்ட் அதாவது ஆர்டிஏ அல்லது டெபாசிட் பார்ட்டிசிபேண்ட்ஸ் அனுப்பிய உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டை பார்க்கவும். உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஆர்டி வெப்சைட்டில் லாகின் செய்யவும் அல்லது ஏதாவது அன் கிளைம்டு தொகையை கண்டுபிடிக்க ஆர்டிக்களால் நடத்தப்படும் எம்எப் சென்ட்ரல் வெப்சைட்டை பார்வையிடவும். நீங்கள் எம்எப் சென்ட்ரல் வெப்சைட்டில் உள்ள மிட்ரா போர்ட்டலிலும் லாகின் செய்து உங்கள் செயலற்ற போலியோக்கள் மற்றும் அன் கிளைம்டு முதலீடுகளை கண்டுகொள்ளலாம். இப்பொழுது உங்கள் முதலீடுகளை கண்டுபிடித்தால் எவ்வாறு கிளைம் செய்வது? உங்கள் ஃபண்டின் அல்லது ஆர்டி ஏக்கல் வெப்சைட்டில் கிளைம் ஃபார்மை டவுன்லோட் செய்யவும். விவரங்களை பூர்த்தி செய்யவும். கையொப்பமிட்டு ஆர்டிஏ அல்லது உங்கள் ஃபண்ட் ஹவுஸ்க்கு அனுப்பவும். அவ்வளவுதான். சரிபார்த்த பிறகு முதலீடும் சேர்க்கப்பட்ட லாபமும் உங்கள் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். எதிர்காலத்தில் உங்கள் பணத்தை அன் கிளைம் ஆகாமல் பாதுகாக்க உங்கள் வங்கி விவரங்கள் விலாசம் மற்றும் கேஒசி விவரங்களை சரியாக வைக்கவும். கூடுதலாக உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டில் இருந்து மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால் உங்களது அருகில் உள்ள ஆர்டிஏ அலுவலகம்ஃண்ட் ஹவுஸ் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் வினியோகரை அணுகவும்.மேலும் முதலீட்டாளர் திடீரென இறந்துவிட்டால் என்ன ஆகும்? முதலாவது உயிரோடு இருப்பவர் நாமினி அல்லது சட்டப்படியான வாரிசு அதாவது கிளைம் செய்பவர் தேவையான கிளைம்ஃபார்ம்களை டவுன்லோட் செய்ய வேண்டும். அவை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஆர்டி வெப்சைட்டில் கிடைக்கும். இறப்பை ஆர்டி அல்லதுஃபண்ட் ஹவுஸில் தெரிவித்து பின்வரும் செயல்முறையை பின்பற்றவும். கிளைம் செய்பவர் தகுதியான இறப்பு சான்றிதலையும் தேவையான பாபார்ம்களையும் அவர்களது ஃபண்ட் ஹவுஸ் அல்லது ஆர்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சரிபார்த்த பின்னர் பரிமாற்றம் கிளைம் செய்பவருக்கு சாதகமாக செயல்படும் இறந்தவரின் ஏதாவது அன் கிளைம் தொகைஇருந்தால் அவை கிளைம் செய்பவருக்கு வேறு எந்த ஆவணமும் அல்லது முயற்சியும் இல்லாமல் செலுத்தப்படும். மேலும் நினைவில் கொள்ளுங்கள் அன் கிளைம்டு தொகையை கிளைம் செய்வது அல்லது ஒரு இறப்பை பதிவு செய்வது போன்ற மியூச்சுவல் ஃபண்ட் சேவைகள் அனைத்தும் மிகவும் எளிதானவை மற்றும் கட்டணம் இல்லாதவை. ஜாக்கிரதை கட்டணம் செலுத்தி உதவி செய்பவர்களின் மோசடி அழைப்புகளுக்கு ஆளாகாதீர்கள். அன் கிளைம்ட் என்றால் போய்விட்டது என்று அர்த்தமல்ல. அது இன்னமும் உங்களுடையதுதான். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதை கண்டுபிடித்து கிளைம் செய்ய வேண்டும். அன் கிளைம்டை கிளைம் செய்வது மிக சுலபம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவனங்களையும் கவனமாக படிக்கவும்.